தமிழக அரசின் பட்ஜெட் ஒரு பூமாலை…

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA வெளியிடும் அறிக்கை )

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு நிதி அமைச்சர் O.பன்னீர் செல்வம் அவர்கள் 2016 – 17 ஆம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை அறிக்கையை சமர்பித்திருக்கிறார் .

மாண்புமிகு முதல்வர் டாக்டர் . அம்மா அவர்களின் மக்கள் நல சிந்தனைகளையும் , தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியதாக நிதிநிலை அறிக்கை சிறப்பாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.

• உள்ளாட்சி அமைப்புகளுக்கு 11,514,34 கோடி ஒதுக்கீடு.

• மருத்துவம் மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக மக்கள் நலவாழ்வுத் துறைக்கு 9.073 கோடி ஒதுக்கீடு.

• உயர் கல்வித்துறைக்கு 3,679.01 கோடி ஒதுக்கீடு.

• பசுமை வீடு திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் கட்டுதல் 420 கோடி ஒதுக்கீடு.
https://m.facebook.com/needhiyinpakkam/

• ஊரக வளர்ச்சி துறைக்கான பணிகளுக்காக 21,186.58 கோடி ஒதுக்கீடு.

• போக்குவரத்து துறை மேம்பாட்டிற்காக 1295.08 கோடி ஒதுக்கீடு.

• நீர் மேலாண்மையை செம்மைபடுத்தும் வகையில் நீர்வள ஆதாரத்துறைக்கு 3,406.69 கோடி ஒதுக்கீடு.

• தமிழ்மொழி வளர்ச்சி துறைக்கு 32.94 கோடி ஒதுக்கீடு.

• உலமாக்கள் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்துதல்.

• விவசாயிகளுக்கு 2016 – 17 ஆம் ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 6 ஆயிரம் கோடிக்கு பயிர்கடன் வழங்குதல்.

• மீன்பிடி தடைக்காலம் மற்றும் மீன்பிடி குறைவாக உள்ள காலங்களில் வழங்கப்பட்டு வந்த மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்துதல்.

என தமிழக அரசின் நிதி நிலை சகல தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும் வகையில், பல்வேறு பூக்களை ஒருங்கிணைத்த பூமாலையாக வாசம் வீசுகிறது .
இதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்று பாராட்டுகிறது.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
21-07-2016

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.