தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகப்பட்டினம் புறப்பட்ட மஜக பொதுச் செயலாளர் அண்ணன் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இராமநாதபுர மாவட்ட எல்லைக்குள் வருகை தந்தபோது ஏர்வாடியில் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது . அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கீழக்கரைக்கு வந்தபோது இராமநாதபுரம் மஜக கிழக்கு மாவட்ட செயலாளர் ஹபீப் தலைமையில் மஜகவினரும் , அதிமுகவினரும் நகர்மன்ற தலைவர் ராபியத்துல் பஜிரியா உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர் .
பிறகு பஜார் வழியே ஊர்வலமாக சென்று நகர மஜக அலுவலகத்தை பொதுச் செயலாளர் திறந்து வைத்தார் . அங்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் , ஜமாத்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்து சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர் .
திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில் பேசிய பொதுச் செயலாளர் , மஜகவின் வேண்டுகோளை ஏற்று இதுவரை இல்லாத அளவிற்கு இரட்டை இலைக்கு பல்லாயிரக்கணக்கில் வாக்களித்ததற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் . மேலும் கீழக்கரை மக்கள் மஜகவை மேலும் வலிமைபடுத்தி அதிக அளவில் உறுப்பினராக இணையவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் .
குறுகிய காலத்தில் திடீரென்று ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சி பலரும் ஆர்வமாக பங்கேற்று தங்களுடைய வாழ்த்துக்களை பொதுச் செயலாளருக்கு தெரிவித்தார்கள் .
அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு இராமநாதபுரம் வந்தபோது பாரதிநகரில் நகர மஜகவினர் பெரும் உற்சாகத்தோடு வரவேற்பளித்து உபசரித்தனர் . நீண்டகாலமாக பொதுச் செயலாளருடன் இணைந்து பணியாற்றிய ஆரம்பகால சகோதரர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொள்வதாக கூறினர் . இச்சந்திப்பின் போது இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் இலியாஸ் , சமீபத்தில் மஜகவில் இணைந்த கீழக்கரை முஜீப் உள்ளிட்டோரும் உடனிருந்தனர் .
அதனைத்தொடர்ந்து இரவு 11மணியளவில் தொண்டிக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்கள் மஜக தொண்டி நகரச் செயலாளர் பகுருல்லாஷா வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார் . 7 மணியிலிருந்து வருகைக்காக காத்திருந்த ஏராளமான சகோதரர்களுக்கு கால தாமதத்தினால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தார் .
பிறகு இரவு 12 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் மாவட்ட பொருளாளர் ஹாரீஸ் தலைமையில் மஜகவினர் தந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு பிறகு நாகைக்கு புறப்பட்டார் .
இச்சந்திப்புகளில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உடனிருந்தார் .
– மஜக ஊடகப்பிரிவு