நாகூரில் மஜகவில் தொடரும் இணைப்புகள் நாகை தொகுதியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மே.27,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்த்து திரளான இளைஞர்கள் மஜக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நாகை தொகுதிக்குட்பட்ட நாகூரில் திரளான இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர்.

புதிதாக இணைந்தவர்களுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அடையாள அட்டை வழங்கினார்.

மேலும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களது அரசியல் செயல்பாடுகள் மற்றும் மஜக-வின் கொள்கைகள் குறித்து புதியதாக இணைந்தவர்களுக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகிகள் கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தினர்.

சமீப காலமாக நாகையில் மஜக-வில் இணைபவர்களின் எண்ணிக்கைகள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_it_WING
#நாகை_மாவட்டம்
26.05.2024.