குவைத்தில் எழுச்சி… நிரம்பி வழிந்த தமிழர் எழுச்சி மாநாடு… திருக்குறளை ஆங்கில அரபியில் ஒப்புவித்த மாணவ மாணவிகள்.. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்பு….

பிப்ரவரி.24.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) குவைத்தில் சிறப்பான சேவைகளை ஆற்றி வருகிறது.

மாநாடுகள், கருத்தரங்குகள், இரத்ததான – மருத்துவ சேவை முகாம்கள், வேலைவாய்ப்பு உதவிகள் என MKP-யின் செயல்பாடுகள் குவைத் வாழ் தமிழக மக்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக குவைத் தமிழர் எழுச்சி மாநாடு பெரும் வெற்றியாக அமைந்தது.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி மாநாட்டு பேருரையாற்றினார்.

பேராசிரியர் சுந்தரவள்ளி, ஜீவா டுடே யூ டியூப் நிறுவனர் ஜீவ சகாப்தன் ஆகியோரும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

மாநாட்டில் பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர். நாற்காலிகள் போதததால் கூடுதல் நாற்காலிகள் வரவழைக்கப்பட்டது.

அதையும் மீறி இரவு 8 மணியளவில் மேலும் கூட்டம் திரண்டதால் மாநாட்டு அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் திரண்டது.

மாநாட்டின் நுழைவாயிலுக்கு சமீபத்தில் மறைந்த இடதுசாரி தலைவரும், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர். சங்கரய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

மாநாட்டு அரங்கின் நுழைவாயிலுக்கு ‘பாலஸ்தீன தியாகிகள் அரங்கம்’ என்று இஸ்ரேலிய பயங்கரவாத போரால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து பெயரிடப்பட்டது.

மாநாட்டு மேடைக்கு சமீபத்தில் மறைந்த குவைத் மன்னர் சேக் நவாப் அல் அஹமத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் பெயரும் சூட்டப்பட்டிருந்தது

நிகழ்ச்சியில் மாணவ – மாணவிகள் திருக்குறளை ஆங்கிலத்திலும் – அரபியிலும் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

இது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

நிகழ்ச்சியில் பேசிய தோழர். ஜீவசகாப்தன் அவர்கள் திரைத்துறை – அரசியல் துறை – ஊடகத்துறையில் முன்னிறுத்தப்படும் ஆபத்தான கருத்தாக்கங்களை தோலுரித்தார்.

தோழர்.. தமிமுன் அன்சாரியும் ஒரு எழுச்சி தமிழர்தான் என்றவர் அவர் அனைவருக்குமான அரசியலை முன்னெடுக்கிறார் என்று கரவொலிகளுக்கிடையே கூறினார்.

அடுத்துப் பேசிய பேரா. சுந்தரவள்ளி அவர்கள் மதவாத – சங்கிகளின் ஆபத்துகளை தனக்கே உரிய பாணியில் நக்கலடித்து பேசி அரங்கை கலகலப்பாக்கினார்.

மாநாட்டு பேருரையாற்றிய மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் மஜக தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கங்களை எடுத்துரைத்தார்.

மேலும் தமிழர்களாய் ஒருங்கிணைந்து திராவிட அரசியலை வலிமைப்படுத்திட வேண்டிய காலத்தின் தேவை குறித்து, தமிழ்நாட்டின் தனித்தன்மைகள் குறித்தும், தமிழர் ஒற்றுமை குறித்தும் அரங்கம் அதிர பேசினார்.

தனது உரையின் நிறைவாக ‘ தமிழ்நாடு வாழ்க’ என மூன்று முறை முழங்கியதும் அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

நிகழ்ச்சியை வலைதளங்கள் வழியாக உலகம் எங்கும் பல்லாயிரக்கணக்கானோர் பார்த்ததால் மாநாட்டின் எழுச்சி எங்கும் வியாபித்திருந்தது.

நிகழ்ச்சியை மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபிஸ் தொகுத்து வழங்கினார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களுக்கும், மாநாட்டு நிதி ஆதரவாளர்களும் சிறப்பு செய்யப்பட்டது.

திருக்குறள் ஒப்பீடு போட்டியில் பங்கேற்ற மாணவ – மாணவிகளுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி கேடயம் அணிவித்து சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

இதில் TVS ஹைதர் குழுமம் சார்பில் ஹைதர் அலி வெளிநாட்டில் இருந்ததால், அவர் சார்பில் மவ்லவி அலி ரஷாதி அவர்கள் பங்கேற்று நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்திய மானுட எழுச்சி பற்றி பேசினார்.

சுப்ரீம் கார்கோ நிறுவனர் A.M.அபூபக்கர் சித்திக் அவர்கள் மாநாட்டின் நோக்கம் குறித்து பாராட்டி பேசினார்.

குவைத்தில் பிரபல பெரியார் வாதியான தோழர். சித்தார்தன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

மாநாட்டில் திமுக, அதிமுக, தி.க, மதிமுக, பாமக, விசிக, தேமுதிக, தவாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும், குவைத்தில் தமிழக மக்களால் நடத்தப்படும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

கடந்த ஈராண்டில் குவைத்தில் நடைபெற்ற மிகப்பெரிய இந்தியர் நிகழ்ச்சி இதுதான் என பலரும் வாழ்த்து கூறினர்.

மாநாட்டு ஒழுங்குகளை மண்டல பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல துணை செயலாளர்கள் சுவாமிமலை ஜாஹிர், ஆயங்குடி நாசர், ஏனங்குடி பாஜில் கான், ஆயங்குடி அபுல் உசேன், ம. மக்கள் தொடர்பு செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல IKP செயலாளர் நீடூர் ஹாலிக், ம. மருத்துவ அணி செயலாளர் நாகை இப்ராஹிம், ம.வணிகரணி செயலாளர் நா.கோயில் சுல்தான், ம.தொழிலாளரணி செயலாளர் நாச்சிகுளம் அப்துர் ரஹ்மான், ம.தொண்டரணி செயலாளர் தலைஞாயிறு கமர், ம.IT Wing செயலாளர் லால்பேட்டை முஜம்மில், ம.அணிகளின் துணை நிர்வாகிகள் பேர்ணம்பேட் துபைல், நெல்லை தஸ்தகீர், கூத்தாநல்லூர் ஜகபர் அலி, நாகை தவ்பீக், அதிரை அஸ்கர், விளாங்குடி தாஹிர், அம்மாப்பேட்டை அபுதாகீர், உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் சிறப்பாக முன்னெடுத்தனர்.

மாநாட்டு குழு தலைவர் வேலம்புதுக்குடி சர்புதீன், நீடூர் ஹாலிக்
உள்ளிட்டோரின் பணிகள் மாநாட்டை எழுச்சி மயமாக்கியது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#குவைத்_மண்டலம்
23.02.2024