ரோஹிங்யா அகதி பிள்ளைகளுடன்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு….

மியான்மரில் (பர்மா) உள்நாட்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு ரோஹிங்யா இன மக்கள் உலகின் பல நாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர்.

குறிப்பாக பங்ளாதேஷ் மற்றும் மலேசியாவில் அதிக அளவு உள்ளனர்.

இன்று கோலாலம்பூர்- அம்பாங் பகுதியில் உள்ள அபுபக்கர் சித்திக் மதரஸா பாடசாலைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார்.

இங்கு பெற்றோரை இழந்த குழந்தைகள் உட்பட 80 பேர் பராமரிக்கப்படுகின்றனர்..

முறையான பொது கல்வி இல்லாமை, உளவியல் பாதிப்பு, பாசத்திற்கான ஏக்கம் என வாடும் அவர்களது நலன்களுக்காக பிரார்த்திப்பதாக பொதுச்செயலாளர் கூறினார்.

இவர்களுக்காக ஒருநாள மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை- மலேசியா மண்டலம் சார்பில் நோன்பு துறப்புக்கான இஃப்தார் விருந்து அளிக்கப்படும் என்று கூறி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாகவும் கூறினார்.

இவர்களை பராமரிக்கும் நிர்வாகிகளை பாராட்டியதோடு, அவர்களுக்காகவும் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

(இவர்களுக்கு உதவ விரும்பும் மலேசியா வாழ் மனிதநேய சொந்தங்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்… 0127860424)