திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் புதிய ஜமாத் நிர்வாகிகள் தேர்தல் மூலம் பொறுப்புக்கு வந்துள்ளனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஜமாத் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறிய அவர், ஜமாத் சார்பில் 8 முதல் +2 வரை பெண்கள் மட்டும் பயிலும் மெட்ரிக் பள்ளிக்கூடத்தை ஜமாத் சார்பில் உருவாக்க திட்டமிடுமாறு கூறினார்.
அரசுப் பணிகளுக்கு ஆட்களை தயார் செய்யும் பயிற்சி மையத்தை தொடங்குவது குறித்தும், பெண்களின் கோரிக்கைகளை விவாதிக்க ஜமாத் சார்பில் ஒரு பெண்கள் குழுவை உருவாக்குவது குறித்தும் யோசிக்குமாறு அறிவுறுத்தினார்.
இதில் ஜமாத் தலைவர் S.M.மஹதும் மைதீன், செயலாளர் M.M.ரபியூதீன், பொருளாளர் N.முகம்மது சுலைமான் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளும், ஊர் பிரமுகர்களும், மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.