கடலூரில் மஜக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு விசிகஆதரவு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கடலூர் வடக்கு மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக தங்களது வீடுகள் மற்றும் நிலங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீர்வு காண வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு அரசியல் தலைவர்கள், சமூக நல செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களிடம், ஆதரவு பெறப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளரும், கடலூர் மாநகராட்சியின் துணை மேருமான தாமரைச்செல்வன் அவர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார்.

மேலும் இந்த கோரிக்கை கையெழுத்து இயக்கத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு விசிக தோழர்கள் ஆதரவளித்து பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில், மாவட்டச் செயலாளர் மன்சூர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, கடலூர் நகர பொருளாளர் உமர் பாரூக் உள்ளிட்ட மஜகவினர் ஆகியோர். உடன் இருந்தனர்.