You are here

கன்னியாகுமரியில் மஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் ரசூல் தலைமையில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்

மஜக மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹஃபிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான காயல் A.R. சாகுல் ஹமீது முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் காயல் A.R. சாகுல் ஹமீது அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்டத் துணைச் செயலாளர் முஜீப் ரஹ்மான், அமீர்கான், ஐயப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அசரப் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் K.S. ரபீக் மாநகரப் பொருளாளர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Top