You are here

பந்தநல்லூரில் மஜக கொடியேற்றம்… பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கொடியேற்றினார்…

ஜூலை 22,

தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூரில் இன்று மஜக கொடியை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஏற்றி வைத்தார்.

இதில் மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, ஜித்தா மண்டல செயலாளர் மஸ்தான், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல செயலாளர் பந்தநல்லூர் உஸ்மான் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக செப்டம்பர் 10 , அன்று நடை பெற உள்ள தலைமைச் செயலக முற்றுகை ஆயத்தப் பணி குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் அவர்கள் கலந்துரையாடினார்.

முன்னதாக,திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாஷா அவர்களின் தந்தை மறைவுக்காக அவருக்கு ஆறுதல் கூறினார்.

மாவட்ட துணைச் செயலாளர் சோழபுரம் பாரூக் அவர்களின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.

அதைத்தொடர்ந்து திருப்பனந்தாள் ஒன்றியம் கோளுளம் பள்ளம் கிளையின் சார்பில் கொடியேற்று விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது இப்ராஹிம், முஹம்மது பாரூக், சையது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது யாசின், மீனவரணி செயலாளர் காதர் செரீப், இளைஞரணி துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, குடந்தை மாநகர செயலாளர் ராஜ் முஹம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
21.07.2022

Top