மார்ச் 30., கடலூர் தெற்கு மாவட்டம், சிதம்பரத்தில் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று கண்டன உரையாற்றிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் ” ஹிஜாப்பின் அவசியத்தையும், அதிகார அவைகளில் இடம்பெற்று வரும் இஸ்லாமிய பெண்களின் கல்வி உரிமையை ஹிஜாப் தடை மூலம் பறிக்கும் RSS-BJP யின் சூழ்ச்சிகளையும், அதனை எவ்வாறு நாம் கையாள்வது என்றும் தெளிவுரையாற்றினார்”.
இக்கண்டன பொதுக்கூட்டத்தில் ஏரளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், நூர் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது ரபீக், இக்பால், கடலூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ரியாஸ், வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாபர் ஒலி, கடலூர் தெற்கு மாவட்ட அணி நிர்வாகிகள் பாஷா, அப்துல்லா, ஜாஹிர், மாணவர் இந்தியா நிர்வாகிகள் முஸ்ரப், பைசல், நவீன், பாருக், சதகத்துல்லா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், சிதம்பரம் நகர செயலாளர் செய்யது புகாரி தலைமையில் நகர நிர்வாகிகள் சதாம், தமீமுல் அன்சாரி, மோத்தி அலி, ஹபிபுல்லா உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சிசதம்பரம்
29.03.2022