32 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளனுக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒன்றிய அரசின் சார்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், பேரறிவாளன் தரப்பின் நியாயங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.
நீண்ட பல வருடங்களாக நடந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்நிலைபாடு தண்டனை காலத்தை கடந்து சிறையிருளில் தவிக்கும் சிறைவாசிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
தோழர்.பேரறிவாளனுக்கும், அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் , இச்சட்டப் போராட்டத்தில் துணை நின்றவர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
09.03.2022