கொள்ளிடம்.மார்ச்:06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் தைக்காலில் (துளசேந்திரப்புரம்) மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொடியேற்று விழா மாவட்ட துணை செயலாளர் தைக்கால் அசேன் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜஹான் அவர்கள் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கொள்ளிடம் ஒன்றிய துணை செயலாளர் அன்சர் அலி அவர்கள் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினார்
இந்நிகழ்வில் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது,கிளை செயலாளர் ஷேக் முஹம்மது,முருகன்,இப்ராகிம் ஷா,ராஜ்குமார், அஹமது பாஷா,சுரேஷ்,ஆமீன்,மாரியப்பன்,ஜாஹிர் உசேன் மற்றும் கிளை நிர்வாகிகள்,செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-IT-WING
மயிலாடுதுறை மாவட்டம்
06.03.2022