You are here

ஜனவரி_08 முற்றுகை..! திமிறி எழும் இராமநாதபுரம் மாவட்டம்..!!

இராமநாதபுரம்.ஜன.06., மனிதநேய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் ஜனவரி 8, கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதிகட்ட பணிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் சூடு பிடித்துள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவர் விளம்பர பணிகள், ஆட்டோ விளம்பரங்கள் நடைபெற்றுள்ளது.

மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் அங்கு சுற்றுப்பயணம் செய்து பணிகள் குறித்து மஜக-வினருடன் ஆலோசித்து பல ஊர்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மாவட்ட துணைச் செயலாளர் முஸம்மில், கீழக்கரை செய்யது இப்ராகிம், கீழை.ஹபீப், முகவை நசீர், தொண்டி ஷேக், மரைக்காயர்பட்டினம் சோனாப்பூர் அஜ்மல், பனைக்குளம் ஆஷிக், ரியாஸ், தொண்டி கலந்தர் என செயல் வீரர்கள் களமாடி வருகின்றனர்.

ஏர்வாடியில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மஜகவின் பணிகளை பார்த்து தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர்.

அழைப்பிதழ் வழங்கும் பணிகளும், வாகன முன்பதிவுகளும் நடைபெற்று வருகிறது.

திமிறி எழுந்து இராமநாதபுரத்தில் மஜகவினர் ஆற்றி வரும் பணிகள் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்கள், மற்றும் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் இம் மாவட்ட பணிகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#இராமநாதபுரம்_மாவட்டம்
04.01.2022

Top