முப்படை தளபதி விபத்தில் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்களும், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 13 பேரும் உலங்கு ஊர்தி (ஹெலிகாப்டர்) விபத்தில் உயிரிழந்த செய்தி நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

இன்று மதியம் முதல் நாடே பரபரப்பாக உற்று நோக்கியிருந்த இந்த விபத்து குறித்த செய்தி இறுதியாக சோகத்துடன் உறுதி செய்யப்பட்டதும் நாடு எங்கும் துயரம் சூழ்ந்திருக்கிறது.

உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிப்பதுடன், நாட்டு மக்கள் அனைவரின் துயரத்தையும் மனிதநேய ஜனநாயக கட்சி சோகத்துடன் பகிர்ந்துக் கொள்கிறது.

முப்படைகளின் தளபதியாக இருந்து நாட்டுக்காக பிபின் ராவத் ஆற்றிய பணிகளை நாடு மறக்காது.

அவற்றை நன்றியோடு நினைவு கூறுவோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
08.12.2021