You are here

பண்ருட்டியில் தி வேல்முருகனுக்கு ஆதரவாக மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது அவர்கள் வாக்கு சேகரிப்பு! ஜீப் மற்றும் இருச்சக்கர_வாகனங்களில் வீதிவீதியாக சென்று பரப்புரை!


ஏப்.01,
இன்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தவாக தலைவர் தி.வேல்முருகன் அவர்களுக்கு ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு மஜக பொருளாளர் எஸ்‌.எஸ்‌. ஹாரூன் ரசீது அவர்கள் பரப்புரை செய்தார்.

பண்ருட்டி நகர் முழுவதும் வாக்குக்கேட்டு சென்றவர், ஜீப் செல்ல முடியாத குறுகிய பகுதிகளிலும் இருச்சக்கர வாகனங்களில் வேட்பாளருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்தின் நடுவே செய்தியாளர்களை சந்தித்த போது, ‘முன்னரே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்று சிறப்பான முறையில் வேல்முருகனை அவர்கள் பணியாற்றி உள்ளார். எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் அதுபோன்று சிறப்பாக பணியாற்றிடுவார்.

அதுமட்டுமின்றி தமிழக மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் தொடர்ந்து போராடக்கூடிய நமது வேட்பாளர் சட்டமன்றம் சென்றால் தொகுதிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் எழுப்புவார்’

என்று பேட்டியளித்தார்.

இந்நிகழ்வுகளில், மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், நகர செயலாளர்கள் பண்ருட்டி M.காஜா மொய்தீன், நெல்லிக்குப்பம் அப்துல்அஜீஸ், IKP ஹலீல் ரஹ்மான் உள்பட அப்பகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பண்ருட்டி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021

Top