
மார்ச்.27,
பண்ருட்டி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உதயசூரியனில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் தி.வேல்முருகன் அவர்களை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பரப்புரை செய்தார்.
முதலில் பண்ருட்டி நகரிலும், தொடர்ந்து நெல்லிக்குப்பத்திலும் பேசியவர், போராட்ட களங்களில் வேல்முருகனோடு களமாடிய அனுபவங்களை கூறினார்.
அவரை திராவிட பற்றாளர் என்றும் தமிழ் தேசிய உணர்வாளர் என்றும் புகழாரம் சூட்டினார்.
குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான களங்களுக்கு போக்குவரத்துக்கு கூட பணம் வாங்காமல் சொந்த செலவில் வருகை தந்து கண்டன முழக்கம் எழுப்பியதை நினைவு கூர்ந்தார்.
சென்னையில் IPL கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும் என்று முன் எடுத்த போராட்டத்தை தங்களோடு கைக்கோர்த்து அதை வெற்றிகரமாக செயல்படுத்த துணை நின்றவர் என்றும் குறிப்பிட்டு, இப்படிப்பட்ட நட்சத்திர வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பரப்புரையின் போது திரளான மக்கள் பங்கேற்றனர். மஜகவினர் கொடிகளோடு அணிவகுத்து வந்தனர்.
அவருடன் மஜக மாநில துணைச் செயலாளர்கள் நெய்வேலி இப்ராகிம், நாகை முபாரக், மாவட்ட செயலாளர் யூசுப், தலைமைக் கழக பேச்சாளர் மன்சூர், பண்ருட்டி நகர செயலாளர் ஹாஜா மொய்தீன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் அஜீஸ் உள்பட திரளான மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பண்ருட்டி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021