
மார்ச்.27,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாபநாசம் சட்டமன்ற தொகுதி மமக வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் விற்கு ஆதரவாக இரண்டு தினங்களாக மஜக பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் தொகுதியில் முகாமிட்டு பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
இன்று இராஜகிரி பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து ராஜகிரியில் வேட்பாளருடன் வீதிவீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இதில் MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, கொள்கை விளக்கக் அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் சேக் முஹம்மது அப்துல்லாஹ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது அலி, ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் திரளான மஜக வினர் கலந்துக் கொண்டனர்
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பாபநாசம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021