
வேலூர்.மார்ச்.24.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.கார்த்திகேயன் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினருடன் சேர்ந்து வாக்குகளை சேகரித்தார், அதன் ஒரு பகுதியாக சைதாப்பேட்டை வருகை தந்த போது அவரிடம் அப்பகுதிக்கான முக்கிய கோரிக்கையாக குடிநீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதியில் சுகதார மையம் அமைக்க வேண்டியும், சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய்கள் சீரமைப்பு புதிய மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது. இதை பெற்றுக்கொண்டவர் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசின் முன்னிலையிலும் சையத் உசேன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அமீன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்..
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#வேலூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
24.03.2021