மார்ச்.17.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் முகமது அபுபக்கர், அவர்களின் அறிமுக கூட்டம் மேலக்கடையநல்லூரில் வைத்து நடைபெற்றது .
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் துணை வாவை இனாயாத்துல்லா, அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவைத் தந்து தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.
அதுபோல் இந்த கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கர், அவர்கள் வெற்றி பெறுவார் அதற்காக மஜக தீவிர களப்பணி ஆற்றும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பண் பொழி அபுதாஹிர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இஸ்மாயில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, வடகரை செயலாளர் செய்யது அலி, அச்சன் புதூர் செயலாளர் முஹம்மது நாசர்,
மற்றும் நிர்வாகிகள், தோழமைக் கட்சி யினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#கடையநல்லூர்_சட்டமன்ற_தொகுதி
#தென்காசி_மாவட்டம்
16-03.2021