சென்னை.மார்ச்.12,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள் வருகை தந்தனர்.
துணைப் பொதுச் செயலாளர் செய்யது முஹம்மது பாரூக் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அனைவரையும் வரவேற்று பேராசிரியர் அவர்களுக்கு “காந்தி 1%” என்ற நூலை அன்பளிப்பு செய்து வாழ்த்துக்களை கூறினார்.
அவருடன் மமகவின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி, தமுமுக நிறுவனத்தலைவர் குணங்குடி ஹனிபா, தமுமுக துணை தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிலைய செயலாளர் அமீன், அமைப்பு செயலாளர் நொலஸ்கோ உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இச்சந்திப்பில் மஜக துணை பொதுச்செயலாளர்கள் ஈரோடு சையத் முஹம்மது பாரூக், தைமிய்யா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், ஷமீம் அகமது, நாகை முபாரக், இளைஞரணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி துணைச்செயலாளர் அப்துர் ரஹ்மான்
மேலும் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச்செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச்செயலாளர் ஹாஜா மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்பின் போது பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் மமகவின் வெற்றிக்கு ஆதரவு கேட்டு பரப்புரைக்கும் வருமாறு பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் அழைப்பு விடுத்தார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தலைமையகம்.
12.03.2021