பொதக்குடியில் மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி! கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!!


பிப்.28,
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மஜகவின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதற்கு கிளை செயலாளர் M.A.முனவர் ஹசன் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் P.M.A.சீனி ஜெஹபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம் ஜம் சாகுல் ஹமீது, ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் P.M.H.நத்தர் கனி முன்னிலை வகித்தனர்.

இதில் மேலபள்ளிவாசல் முத்தவல்லி A.M.லியாகத் அலி கொடியேற்றி வைத்தார். ஊர் உறவின் முறை ஜமாத் அறப்பணி சங்க தலைவர் மஹதும் மைதீன் பொதுமக்களுக்கு முதல் மரக்கன்றினை கொடுத்து விநியோகத்தைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஜமாத்தார்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட திரளான மஜகவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*