லால்பேட்டையில் மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா..! சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்!!


பிப்.28,
கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

சிறுவர், சிறுமியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர்.

கட்சியின் துவக்க விழாவில் பேரணிகள், கொடியேற்றம் என நடந்து கொண்டிருக்கும் வேலையில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளை மாவட்ட செயலாளர் OR. ஜாக்கிர் உசேன், மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், ரியாஸ், மாவட்ட வணிகர் அணி செயலாளரும், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவருமான Amk முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாணவர் இந்தியா முன்னாள் மாவட்ட செயலாளர் அஜ்ஹர் அலி, நகர நிர்வாகிகள் ஜாஹிர், நூர் உள்ளிட்டோர் வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.