ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!நாகை மஜக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு!


அக்.10,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், புதிதாக அமுலுக்கு வந்துள்ள ‘ஒரே நாடு- ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் படி, தங்களுக்குண்டான உணவு பொருட்களை உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதல் (பயோமெட்ரிக்) மூலம் பொதுமக்கள் அனைவரும் விரல் ரேகையை பதிவு செய்து தான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்ற நிலை கடந்த அக்.01 முதல் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தபட்டு உள்ளது.

ரேஷன் கார்டுதாரர்கள் தொழில்நுட்ப காரணங்களினால் உடற்கூறு முறையிலான தகவல் உறுதிப்படுத்துதலை மேற்கொள்ள இயலாத நிலையில், கீழ்காணும் வழிகாட்டல்களை அரசு வழங்கியுள்ளது.

தற்போதுள்ள மின்னணு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் தொடர்புடைய செல்போனுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (ஓ.டி.பி.), ஆதார் கார்டு மற்றும் தற்போதுள்ள நடைமுறையான ரேஷன் கார்டு ஸ்கேனிங் முறையை பின்பற்றியும் அத்தியாவசிய பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்களை பெறுவதற்கு, உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களை நியமித்து, உரிய படிவத்தில் அவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அளிப்பதற்காக இணையதளத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, அந்த நபர் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் பெறப்பட்ட ‘ஓ.டி.பி.’ எண் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

கைவிரல் ரேகையை அங்கீகரித்து பொருள் வழங்க இயலாதபட்சத்தில், ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ரேஷன் கார்டுதாரருக்கு சிரமமின்றி பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என அரசு கூறியுள்ளது.

விரல்ரேகை பதிவாகவில்லை என்று ரேஷன்பொருட்களை அளிக்காமல் திருப்பி அனுப்புவதை தவிர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்களை பெறுவதற்கு, உறவினர்கள் (அ) தெரிந்தவர்களை நியமித்து பொருட்களை பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இத்திட்டங்களை விளக்கி நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.