மாற்றுக்கருத்து கொண்டோரிடமும் நன்மதிப்பை பெற்ற கட்சி மஜக! கட்சியில் புதிதாக இணைந்தவர்களிடம் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA உரை!

ஜூலை.2,

இன்று தஞ்சை மாவட்டம், திருவையாறு தொகுதிக்குட்பட்ட திருப்பந்துருத்தியில் 60 பேர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையும் நிகழ்வு நடைப்பெற்றது.

இதில் காணொளி வழியாக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று வாழ்த்தி பேசினார்.

அவர் உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

கொரோனா நெருக்கடி காலத்தில் மஜக-வின் பணிகளை பார்த்து நீங்கள் எல்லாம் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எந்த நம்பிக்கையில் வந்தீர்களோ அதை காப்பாற்றும் வகையில் செயல்படுவோம். உங்கள் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பணிகளை திட்டமிடுவோம்.

நிறைய இளைஞர்களும், மாணவர்களும் சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள் வியக்கும் வகையில், அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்களை வழி நடத்துவோம்.

மஜக என்பது பன்மைத் தன்மையுடன் செயல்படும் துடிப்பு மிக்க அரசியல் பேரியக்கமாகும்.

ஊழியர்களின் ஆற்றலை மேம்படுத்தி அரசியல் முதிர்ச்சியுடன் பொது சேவைகளை ஆற்றும் களமாகும்.

முற்போக்கான செயல்பாடுகளும், பக்குவமான சிந்தனைகளும், சமரச மற்ற அரசியலும், நிதானமான அணுகுமுறைகளும் இக்கட்சியின் சிறப்புகளாகும். அதனால் தான் நீங்கள் எல்லோரும் ஈர்க்கப்பட்டு இதில் இணைந்திருக்கிறீர்கள்.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் ஆகிய கொள்கைகளோடு மக்களை இணைக்கும் மனிதநேய செயல்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

பொது சேவையாற்ற வந்திருக்கும் நீங்கள் உள்ளுர் மக்களின் பிரச்சனைகளை, அவர்களின் தேவைகளை அதிகார வர்க்கத்திற்கு எடுத்துச் சென்று தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் சேவைகளை செய்ய வேண்டும்.

மக்களோடு பயணிக்க வேண்டும். பெரியவர்களையும், பிற அமைப்பினரையும் மதிக்க வேண்டும். யாரையும் காயப்படுத்தக்கூடாது.

மாற்றுக்கருத்து கொண்டோரிடமும் நன் மதிப்பை பெற்ற கட்சியாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும்.

பொது வாழ்வில் செயல்படும் போது பொறுமை அவசியம். முக்கியமாக கீழ்படிதல், கட்டுப்படுதல் அவசியம். நமக்கு மேல் இருக்கும் பொறுப்பாளர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நம் பொறுப்புக்கு கீழ் இருப்பவர்களை அரவணைக்க வேண்டும்.

வெற்றிகளை, இலக்குகளை அடைய நிதானம் அவசியம்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் சிறப்பாக கட்சியில் செயல்பட வாழ்த்துகிறோம்.

எங்கள் மடியில் விழுந்த மாங்கனிகளாக கருதி உங்களை வரவேற்று மகிழ்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் அஹ்மது, தஞ்சை நகரச் செயலாளர் அப்துல்லா, திருவையாறு ஒன்றியச் செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

நடுக்கடை, கண்டியூர் போன்ற பல அருகாமை ஊர்களிலும் திரளானோர் மஜக-வில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்
02-07-2020