அதிரையில் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் கபசுர குடிநீர் விநியோகம்!

ஜூலை.01,
அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தொடர்ந்து மூன்றாம் நாளான இன்றும் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

செக்கடி பள்ளிவாசல், கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மஜக ஆதரவாளரும், சமூக ஆர்வலருமான சாதலி அவர்கள் தலைமையில் நகர பொருளாளர் அஷ்ரப் அவர்கள் முன்னிலையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என சுமார் 300 க்கும் அதிகமானோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்), அதிரை சேக், நகர செயலாளர் அப்துல் சமது, துணைச் செயலாளர்கள் அகமது அஸ்கர், ஹாஜா மர்ஜூக், இளைஞர் அணி செயலாளர் ஜகுருல் ஹக், தொண்டரணி செயலாளர் நபில் மற்றும் ஹைதர் அலி, ஆலிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING #அதிரை_நகரம்
#தஞ்சைதெற்குமாவட்டம்.