உயிர்களை காக்க ஊரடங்கு பேணப்பட வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்றின் தாக்கம் இப்போது நம் நாட்டில் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

குறிப்பாக ஜூன் மாதத்தில் இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது தான் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது.

ஊரடங்கை பேணுவதிலும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் கொஞ்சம், கொஞ்சமாக அக்கறை இழக்கப்படுகிறதோ என்ற கவலை எல்லோருக்கும் உருவாகி வருகிறது.

ஒருவரையொருவர் சுய கட்டுப்பாடுகளின் மூலம் காப்பாற்றிக் கொள்ள கூடிய நிலை உள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இது குறித்து கூடுதல் பொறுப்புணர்வு காட்ட வேண்டிய தருணம் இது என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு இவ்விஷயத்தில் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையில், கொரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது ஒரு வாரத்திற்கு முழுமையான ஊரடங்கை அமல்படுததுவது குறித்து யோசிக்க வேண்டும்.

அப்படி அறிவிப்பதற்கு முன்பாக 48 மணி நேர அவகாசத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், அப்பகுதிகளில் வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
11.06.2020