பிப்.19.,
குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்தும் அதை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் கோவை மாவட்ட அனைத்துக் கூட்டமைப்புகள் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் அவர்கள் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரஷீத், இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, ஆகியோர் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் அனைத்து அமைப்புபுகள், கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், மத்திய மாநில அரசுகளுக் கெதிராக பேரணியாக திரண்டு கோஷமிட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர்.
காவல்துறை தடுப்புகளை வைத்து தடுத்ததால் சிறிது நேரம் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் நிலைமை சீரானதும் போராட்டம் நிறைவுபெற்று மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் A.K.சுல்தான் அமீர், தொழிற்சங்க மாநிலச் செயலாளர் கோவை எம்.ஹெச். ஜாஃபர் அலி, மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் T.M.S. அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR.பதுருதீன், பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, மற்றும் நகர, பகுதி, கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
19.02.2020