காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் S.M.ஜெய்னுலாபுதீன் அவர்களும் உடனிருந்தார்.
அவரது சிறைவாசம் மற்றும் உடல் நலம் குறித்தும் பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டறிந்தார்.
நடப்பு தேசிய அரசியல் நிகழ்வுகள் குறித்தும், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் குறித்தும் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பிப்.29 அன்று கோவையில் மஜக நடத்தும் வாழ்வுரிமை மாநாடு குறித்தும் ப.சிதம்பரம் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING