நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் : முதமிமுன் அன்சாரிMLA பேச்சு!

டிச.22,

மத்திய அரசின் CAA மற்றும் NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமா மற்றும் கூட்டமைப்பு சார்பில் கண்டன மாநாடு எழுச்சியோடு நடைப்பெற்றது.

கூட்டத்தில் சிறப்பம்சமாக ஐயப்ப சாமி பக்தர்களும் பங்கேற்று கண்டன முழக்கத்தில் முழங்கியதை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி போன்றோர் ரசித்தனர்.

ஜம்மியத்துல் உலமா ஹிந்த்தின் தமிழக தலைவர் M. மஹ்மூத் மன்சூர் காஸிபி ஹஜ்ரத் அவர்கள் இந்துக்களும், முஸ்லிம்களும் ஃபாஸிஸ்டுகளுக்கு எதிராக போராடுவதை சிலாகித்து பேசினார்.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசும் போது, போராட்டம் பொறுப்புணர்வுடன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லப் பட வேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

மேடைகளில் பேசுபவர்கள் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றார்.

பிறகு, நாட்டில் நடைபெறும் கிளர்ச்சிகளை பட்டியலிட்டவர். அரசப் படைகளின் துப்பாக்கி சூடுகளை கண்டித்தார். இன்று நடைபெறும் அனைத்து அமளிகளுக்கும் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காட்டமாக பேசினார்.

மாலை 4 மணியிலிருந்து இரவு 9:45 வரை கூட்டம் கட்டுக்கடங்காமல், அதே நேரம் கட்டுப்பாட்டோடு இருந்தது அனைத்து தரப்பாலும் பாராட்டப்பட்டது.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திண்டுக்கல்_மாவட்டம்.