You are here

அமைச்சர் O.பன்னீர்செல்வம் அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு…

நேற்று அமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து உரையாடினார்.

அப்போது பொதுசிவில் சட்டம் குறித்து திரு.வைகைசெல்வன் அவர்களின் கருத்துக்கு தனது ஆட்சேபனையை தெரிவித்து இது சிறுபான்மை மக்களிடம் அதிருப்தி ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டினார்.

அப்போது இது தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும், அது அவருடைய கருத்து மட்டுமே கட்சியின் கருத்து அல்ல என்றும், இது குறித்து அவரிடம் கேட்பதாக கூறினார்.

வழிபாட்டு தளங்களில் கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பான அணுகுமுறைகள் குறித்து அலைபேசியில் சுட்டிக்காட்டியதையும் பொதுச்செயலாளர் அவர்கள் நினைவூட்டினார்.

தகவல்: மஜக ஊடகப்பிரிவு

Top