You are here

நாகை தொகுதி மீனவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் தமிமுன் அன்சாரி MLA

நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த மீனவ சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை செயல்படுத்தும் விதமாக இன்று அவ்வூர் மீனவ சமுதாய தலைவர்களை அழைத்து கொண்டு #மஜக_பொதுச்செயலாளரும் #நாகை_சட்டமன்ற_உறுப்பினருமான #தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள்  மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் #ஜெயக்குமார் அவர்களை சந்தித்தார்.

நாகூர் பட்டினச்சேரி மீனவ சமுதாய மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்து வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.

நாகூர் பட்டினச்சேரி மீனவ சமுதாய மக்கள்  இச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.

Top