மஜகவின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் அலி அவர்களின் தந்தையும், தாயும் அடுத்தடுத்து இறந்தனர். அவருக்கு ஆறுதல் கூற, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அவரது வீட்டிற்கு வருகை தந்தார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா மற்றும் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோர் உடன் வருகை தந்தனர். பிறகு அங்கு வருகை தந்த நிர்வாகிகளுடன் 'மக்களுடன் மஜக' பணிகள் குறித்து கலந்துரையாடினர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஹாஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அறந்தாங்கி அஜ்மீர் அலி, திருப்பத்தூர் மஜிது மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, துணை செயலாளர் ஹமீது, அறந்தாங்கி நகர தொழிற்சங்க தலைவர் சோலைமலை, மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் முகம்மது இளைஞர் அணி செயலாளர் பைசல், பேராவூரணி நகர செயலாளர் முஜீப் ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Month:
மதுரையில் மஜகவினர் அவசரகால இரத்ததான உதவி..!
ஆம்பூர் நகர மன்ற தலைவரை சந்தித்து மஜகவினர் மனு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் "மக்களுடன் மஜக" என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மன்ற தலைவர் P.ஏஜாஸ் அஹ்மத் அவர்களை மஜக மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா தலைமையில் மஜகவினர் சந்தித்தனர். இதில் ஆம்பூர் நகரத்தில் கடந்த பத்து வருட காலமாக சாலைகள் குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்பட்டு இப்போது சாலை போடும் பணி துவங்கியுள்ளது ஆனால் புதிய சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைக்க வேண்டும். பழைய சாலைகளை தோண்டாமல் அப்படியே அதன் மீது புதிய சாலைகளை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அதை சரிசெய்யவும், தரமான சாலை அமைக்கவும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கும் நிலையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புதிய கால்வாய் அமைத்து சாலையையும் சீர் செய்து தர வேண்டும் என்றும், பொது மக்களின் நலன் கருதி ஆம்பூரின் பல்வேறு பகுதியில் சுற்றி திரியும், தெரு நாய்களை
Evks இளங்கோவனை மஜக தேர்தல் பணிக்குழு சார்பாக துணை பொதுச்செயலாளர் S.A.சையது அகமது ஃபாருக் சந்திப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS.இளங்கோவன் அவர்களை, மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு இடைத்தேர்தல் பணிக்குழு தலைவரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான S.A சையது அகமது ஃபாருக், மற்றும் தேர்தல் பணிக்குழு துணை தலைவரும், மாநில துணை செயலாளருமான பாபு ஷாஹின்ஷா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திரு. EVKS.இளங்கோவன் அவர்கள் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பிரச்சாரத்திற்கு தவறாமல் வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். மேலும் இச்சந்திப்பின் போது பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய "புயலோடு போராடும் பூக்கள் " புத்தகத்தையும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அலி வழங்கினார். இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், மேற்கு மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளர் எக்சான், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன், நஜீர், இளைஞரணி கிழக்கு மாவட்ட செயலாளர் திலீப்குமார், மாவட்ட தொழிற்சங்க
நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ, துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான ஹாரிஸ் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் "மக்களுடன் மஜக" நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.