டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் இன்று குடியரசு தினத்தையொட்டி, டிராக்டர் பேரணி நடத்திய போது, அவர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களோடு வலதுசாரி மதவெறியர்களும் காவி கொடிகளுடன் புகுந்து விவசாயிகளை தாக்கியுள்ளனர். டெல்லியை நோக்கி செல்லும் 3 தேசிய நெடுஞ்சாலைகளில் முறையாக அனுமதி பெற்று லட்சக்கணக்கான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களுடன் நுழைந்துள்ளனர். வழியெங்கும் பொதுமக்கள் கூடி அவர்களை வரவேற்றுள்ளனர். இதை பொறுக்க முடியாமல், விவசாயிகள் மீது அரச வன்முறைகளை ஏவியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக டெல்வியில் மக்கள் அமைதியாக போராடியபோது காவல்துறையும், வலதுசாரி மதவெறியர்களும் இப்படித்தான் அங்கு வன்முறைகளை ஏவினார்கள். அது இப்போதும் தொடர்கிறது. ஃபாஸிஸ்ட்டுகள் எப்போதும் சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், சர்வாதிகார போக்கு கொண்டவர்களாகவுமே இருப்பார்கள் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 72 வது குடியரசு தினத்தை மத்திய அரசு தன் பிடிவாதத்தால் போர் களமாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை துயரத்தோடு பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. இனியாவது மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளை திருப்திபடுத்த நினைக்காமல், உடனடியாக சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்
Month:
72வது குடியரசு தின மஜக நிகழ்ச்சிகள்..! இளையான்குடியில் மஜக மாநில துணை செயலாளர் சைபுல்லாஹ் தேசிய கொடியேற்றினர்.!
சிவகங்கை.ஜனவரி 26., இந்திய நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பில் இளையான்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஜக மாநில துணை செயலாளர் K.A.முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் தேசியக கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மஜக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணை செயலாளர் கே.பி.எஸ் ஜெயினுலாபுதீன், நகர பொறுப்பாளர்கள் டீ கே.பஷீர், அகமது கான்சா, சிராஜூதீன், சதாம் உசேன், முஸ்தபா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கலந்து கொண்டனர் தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சிவகங்கை_மாவட்டம் 26-01-2021
72வது குடியரசு தின மஜக நிகழ்ச்சிகள்..! திருச்சியில் மஜகவினர் தேசிய கொடியேற்றினர்.!
திருச்சி.ஜனவரி 26., இந்திய நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பேராசிரியர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தர்கா பாரூக் அவர்கள் தேசியக கொடியை ஏற்றி வைக்க, சையது முஸ்தபா அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் மஜக-வின் நிர்வாகிகள் முஹம்மது பீர்ஷா, அந்தோணிராஜ், சேக் அப்துல்லா, சையது அன்வர், வாஹித், சல்மான், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு குடியரசுதினவிழா கொடியேற்றத்தை சிறப்பு செய்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 26-01-2021
72வது குடியரசு தின மஜக நிகழ்ச்சிகள்.! நெல்லையில் மஜகவினர் தேசிய கொடியேற்றினர்.!
72வது குடியரசு தின விழாவையொட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் பேட்டை நகரம் சார்பாக இரண்டு இடங்களில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் என்ற உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினர். நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அகிலபாரத விஸ்வகர்மா உறவுகள் நிறுவனர் வழக்கறிஞர் ஆறுமுகராஜ், இணை செயலாளர் SMS.முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, மாவட்டதுணை செயலாளர் இரா.முத்துக்குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் முருகேசன், புகாரி, பேட்டை நகர நிர்வாகிகள் ஐடிஐ சங்கர், அசன்கனி, மூர்த்தி, ஆதிமூலம், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேட்டை நகர துணைசெயலாளர் சம்சுதீன் சிறப்பாக செய்திருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நெல்லை_மாவட்டம் 26-01-2021
அத்திக்கடையில்.. 72 தென்னங்கன்றுகள் வழங்கி மஜகவினர் குடியரசு தின கொண்டாட்டம்!
ஜன.26, இன்று மனிதநேய ஜனநாயக கட்சி அத்திக்கடை பாலாக்குடி கிளை சார்பாக 72 வது குடியரசு தினம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் K.Aஅப்துல் காதர், கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பட்டக்கால் குத்புதீன், கிளை செயலாளர் A.A செய்யது உமர் சலீம் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை ஒன்றிய கவுன்சிலரும், ஜமாத் தலைவருமான K.H அப்துர் ரஹ்மான் முன்னிலையில் தொழிலதிபர் A.A ஜெஹபர் உசேன் (UAE ) ஏற்றி வைத்தார். தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக கிளை செயலாளர் A.A அப்துல் முஹம்மது, திமுக மூத்த நிர்வாகி T.A நிலாபுதீன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் M.M.Y ஜெஹபர் சாதிக், கொரடாச்சேரி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முஹம்மது சலீம், ஜமாத் செயலாளர் முஹம்மது சுல்தான், KFC கிளப் நண்பர்கள் பங்கேற்க மஜகவின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 26.01.2021