ஜனவரி.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரம் சார்பாக இன்று பல்வேறு பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் தன்னார்வத்துடன் பலரும் தங்களை மஜகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இம் முகாம்களில் பல சமூக ஆர்வலர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #விருதுநகர்_மாவட்டம் 01-01-2021
உறுப்பினர் சேர்க்கை
கோவை தெற்கு பகுதியில் மஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்!
கோவை:ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 ஆவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் கோவை தெற்கு பகுதிக்குட்பட்ட குனியமுத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் பகுதி செயலாளர் காஜா உசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் KA.பாருக், அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் திரளானோர் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களை மஜக வில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பகுதி பொருளாளர் நெளஷாத், துணை செயலாளர்கள் ஜியாவுல் ஹக், நிசார், ரியாஸ்தீன், ஷாஜகான், மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 01.01.2021
மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்..! மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் தொடங்கி வைத்தார்.!
ஜனவரி.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் உறுப்பினர் படிவத்தை பதிவு செய்து மஜகவின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ஜாஃபர், துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலா மற்றும் கதிர் உசேன், அப்பாஸ் அலி, ஆரிஃப் மற்றும் திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 01-01-2021
பழனியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பழனி மதினா நகர் அல்ஃபலாஹ் பள்ளிவாசல் அருகில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட பொருப்பாளர் அ,ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் பழனி, சாந்து முஹம்மது, துவக்கி வைத்தார், அதை தொடர்ந்து இளைஞர்களும் ஜமாத் பெரியவர்களும் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக ஆர்வமுடன் பதிவு செய்து கொண்டனர். இதில் பழனி நகர நிர்வாகிகள் சையது காதர்(என்ற) பாபு, சையது பாட்ஷா, ராஜா முகம்மது, சுல்த்தான், காதர் மைதீன்,உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திண்டுக்கல்_மாவட்டம் 01.01.2021
மதுரையில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்!
ஜன.01., மதுரை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தக்கடை பாருக், புதூர் கனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒத்தக்கடை, மேலூர், கோரிப்பாளையம், புதூர், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு தங்களை மஜக வின் உறுப்பினராக பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் கோடை அப்துல் மஜீத், பென்ஸ் மோகன், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_மாவட்டம் 01.01.2021