74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டத்தில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருது_நகர்_மாவட்டம் 15-08-2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
74வது சுதந்திரதினம்.! மஜக தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக பல்வேறு பகுதிகளில் தேசிய கொடியேற்று நிகழ்ச்சி.!
தஞ்சை.ஆகஸ்ட்.15., 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக பண்டாரவடை, அய்யம்பேட்டை, திருபனந்தாள் ஆகிய பகுதிகளில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பண்டாரவாடையில் நடைபெற்ற நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.முஹம்மது மஃரூப் அவர்களும், அய்யம்பேட்டையில் மஜக மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் அ.காதர் பாட்சா அவர்களும், திருப்பனந்தாள் பகுதியில் மாவட்டப் பொருளாளர் குடந்தை நிஜாம் அவர்களும் தேசிய கொடியை ஏற்றிவைத்தனர். பின்னர் மஜகவினர் மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திரதினம்! மஜக சார்பில் நீலகிரி மேற்கு மாவட்டத்தில் கொடியேற்று விழா!!
நீலகிரி:ஆக.15., 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் பாபு, மற்றும் நகர , கிளை பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 15.08.2020
74வது சுதந்திரதினம்!மஜக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் தேசிய கொடியேற்று நிகழ்ச்சி.!
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை பாலாக்குடியில் காயிதே மில்லத் படிப்பகம் அருகில் மரைக்காயர் ஹழ்ரத் MP. அப்துல் அஜிஸ் ஆலிம் ஜமாலி அவர்கள் தேசிய கொடியேற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக முன்னால் மாவட்ட துணை செயலாளர் லியாக்கத் அலி, கிளை ஒருகிணைப்பாளர் AAA.முகமது உசேன் கொரடாச்சேரி முன்னால் ஒன்றிய செயலாளர் K.A.அப்துல் காதர், கிளை செயலாளர் பைசல் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் அமீரக அஸோஸியேஷன் தலைவர், நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு முககவசங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 15-08-2020
74வது சுதந்திர தினம்.!நாச்சிகுளத்தில் மஜக மாநிலச்செயலாளர் தாஜுதீன் தேசிய கொடியேற்றினார்.!
திருவாரூர்.ஆகஸ்ட்.15., நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சியில் மஜக மாநிலச் செயலாளரும், ஊராட்சி மன்ற உறுப்பினருமான நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். சமூக ஆர்வலர் APM.யாக்கத் அலி அவர்கள் சுதந்திரத்தின் தியாகங்கள் என்ற தலைப்பி சிற்றுரையாற்றினார், அதற்கு முன்பாக கொடியேற்று நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் கிளை செயலாளர் ரியாஸ் அகமது அவர்கள் முக கவசங்களை வழங்கி வரவேற்றார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பஹ்ரைன் மண்டல ஆலோசகர் ஜான் முகம்மது, ஜமாத் துணை தலைவர் KPN கபீர், ஒன்றிய கவுன்சிலர் சார்பில் அன்வர் அலி, மஜகவின் ஊராட்சி மன்ற உறுப்பினரான ராயல் காதர் அவர்களும், மஜக நிர்வாகிகளும், இளைஞர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவாரூர்_மாவட்டம் 15-08-2020