மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று (02.06.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோவை ஜாபர் அலி அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக உள் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

அவருடன் IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் PMA.பைசல் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும், பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் M.சுலைமான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹனீப், A.S.ஜாபர் சாதிக், KTUகாஜா, அன்வர்பாஷா, ஆயில் ஹக்கீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அ.பாஜில் ரஹ்மான், திலீப், MJTS தொழிற்சங்க செயலாளர் ஜாகிர், பொருளாளர் அன்சர், துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட இளைஞரனி செயலாளர் MMR.முஜீப், துணை செயலாளர் இம்ரான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பயாஸ், பொருளாளர் அப்துல்சலீம், துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைரோஸ் கான், முன்னால் mjts ஷாஜஹான், ரியாஸ், சிக்கந்தர், சஹாபுதீன், அமானுல்லாஹ், சிக்கந்தர். அல்அமீன் காலனி முஹம்மது ஆசிக், செல்வபுரம் நசீர், உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,