மஜகவினர் இல்லங்களுக்கு பொதுச்செயலாளர் வருகை!

ஜூலை 24., திருவாரூர் மாவட்டம் நாச்சிக்குளத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார்.

#பஹ்ரைன்_முன்னாள்_மண்டல செயலாளர் ஜான் மற்றும் அமீரக மண்டல செயலாளர் அசாலி அகமது ஆகியோரின் தந்தை அப்துல் சுக்கூர் அவர்களின் மறைவையொட்டி அவர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

பிறகு #குவைத்_மண்டல_முன்னாள் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

பிறகு #மஜக நிர்வாகிகள் ஹபிபுல்லாஹ் மற்றும் ரஷீது ஆகியோரின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரிடம் நலன் விசாரித்தார்.

#நாச்சிக்குளம் கிளை நிர்வாகிகளிடம் கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

அடுத்து #முத்துப்பேட்டை சென்று அங்கு நகர மஜக நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பிறகு முபீன் ட்ராவல்ஸ் உரிமையாளர் #முகம்மது_மாலிக் அவர்களின் தந்தையார் மறைவுக்கு ஆறுதல் கூற அவரின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவ்வூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் வருகை தந்து சால்வை அணிவித்து அவருக்கு மரியாதை செய்தனர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் #கோட்டைப்பட்டினம் வந்து #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில செயலாளர் ஹாரிஸ் இல்லத்துக்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினார்.

அங்கு கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் கிளை நிர்வாகிகளையும் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வுகளில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் . தாஜ்தீன் அவர்களும், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWing
24.07.21

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.