தொண்டியில் பேருந்து பணிமனை அமையவேண்டும் ! கருணாஸ் MLA விடம் மஜக வேண்டுகோள் !

திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டியில் முன்பு அறிவிக்கப்பட்ட அரசு பேருந்து பணிமனையை தொண்டியிலிருந்து திருவாடானைக்கு மாற்றக்கூடாது என்றும் , அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொண்டியை சேர்ந்த மஜகவினரும் , சமூக ஆர்வலர்களும் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA அவர்களை தொடர்புகொண்டு பேசினர் .

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சந்தித்து , மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரிMLA தொண்டி மக்களின் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினார் . இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கருணாஸ்MLA தெரிவித்தார் .
மேலும் தேர்தல் வாக்குறுதிப்படி தொண்டியில் ஒரு அரசு கலைக்கல்லூரி அமைய நடவடிக்கை எடுத்தால் , அது அப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் மஜக பொதுச் செயலாளர் கருணாஸிடம் கோரிக்கை வைத்தார் .

– மஜக ஊடகப்பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.