தஞ்சையில் மஜக_8-ஆம் ஆண்டு தொடக்க விழா… மஜக பிரதிநிதிகள் சங்கமம்…

இன்று திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாக குழு கூட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

அதில் மஜக-வின் எட்டாம் ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மஜக-வின் கிளை முதல் மாநிலம் வரையிலான அனைத்து மட்ட நிர்வாகிகளும் பங்கேற்கும் வகையில் “மஜக பிரதிநிதிகள் சங்கமம்” நிகழ்ச்சியை தஞ்சாவூரில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்திற்கு வெளியே வெளிநாடுகளில் செயல்படும் நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி கொடியேற்றம், கட்சியின் சாதனைகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி, புத்தக கண்காட்சி, ஆவணப்பட திரையிடல், பிரபல ஆளுமைகளின் உரைவீச்சு, விருது வழங்குதல், இளைஞர்- மாணவர் அரங்கு, கலை நிகழ்ச்சி என பன்முக தன்மைகளோடு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட உள்ளன.

பெண் நிர்வாகிகளுக்கு சிறப்பு பகுதியும் ஏற்பாடு செய்ய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“தஞ்சையில் திரள்வோம்; தன்னுரிமை காப்போம்” என்ற முழக்கம் இதற்காக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.