செப் 10 முற்றுகை முன்னோட்டம்… சிதம்பரத்தில் எழுச்சிமிகு இருசக்கர வாகன அணிவகுப்பு! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜூன்:28,

10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு தமிழகம் எங்கும் ஆயத்த ஏற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் எழுச்சிமிகு இரு சக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று 4 இடங்களில் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்தார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜீதீன், மாநிலச் செயலாளர் நாகை. முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர்.

நகரின் பிரதான சாலைகளில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் மஜக கொடிகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் இளைஞர்கள் முழக்கங்களுடன் அணிவகுத்தனர்

வழியெங்கும் பொதுமக்கள் கையசைத்து அணிவகுப்பை உற்சாகப்படுத்தினர்.

இது செப் 10, தலைமைச் செயலக முற்றுகைக்கு முன்னோட்ட அணிவகுப்பாக அமைந்தது என பலரும் கூறினர்.

இதில் மாவட்ட செயலாளர் OR ஜாகிர் ஹூசைன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், இக்பால், மாவட்ட இளைஞரணி நைனா, MJTS மாவட்ட செயலாளர் பாஷா, மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் முஸரப், பைசல், பாருக், சதகத்துல்லாஹ், ஒன்றிய செயலாளர் ஹாஜா மெய்தீன், குமராட்சி காசிம்.அயலக MKP நிர்வாகிகள் பரங்கிபேட்டை பாருக், லால்பேட்டை ஷபிக், நாகூர் ஹமீது ஜெகபர், நகர செயலாளர் இப்ராம்ஷா, நகர பொருளாளர் சதாம் , நகர MJTS தமீம், நகர துணை செயலாளர் மொத்தி அலி, ஜாஹிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
28.06.2022