சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை FIM சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பாராட்டு!

image

image

சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (Federation Of Indian Muslim) 26 வது பொதுக் கூட்டம் சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது .

தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . 

இக்கூட்டத்தில் , கடந்த 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற  தொகுதியில் வெற்றி பெற்றதற்கு தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஹாஜி . சர்புதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . அதன் பிறகு பென்கூலன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் ஹாஜி. முஹம்மது ரஃபிக் அவர்கள் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (FIM) சார்பில் பொற்கிழி வழங்கி கெளரவித்து பாராட்டி சிறப்பித்தார்கள் . 

இந்நிகழ்வில் MES நிறுவனத்தின் தலைவர் ஹாஜி. அப்துல் ஜலில் , சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் ஹாஜி. முகம்மது கெளஸ் , துணைத் தலைவர் ஹாஜி . ஜெய்னுலாபுதீன் மற்றும் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர் .

மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK- IT WING)
சிங்கப்பூர் மண்டலம்
05.03.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.