கோவையில் எழுச்சியுடன் நடைப்பெற்ற மஜகவின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…

ஏப்:22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் (அன்பால் இணைவோம்) இஃப்தார் நோன்பு துறப்பு நிழ்ச்சி மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா, அவர்கள் நீதி போதனை யாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான் அமீர், மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், ஜாபர் சாதிக், மற்றும் மாவட்ட, நகர, பகுதி, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
22.04.2022