கும்பகோணத்தில் சான்றோர் சந்திப்பு…

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வருகை தந்த மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கும்பகோணம் ஹாஜியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட சான்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடினார்.

இதில் பெரிய பள்ளியின் ஜமாத் தலைவர் அய்யூப் கான், ஹாஜியார் பள்ளியின் ஜமாத் தலைவர் அப்துல் கபூர், முத்தையா நகர் பள்ளியின் ஜமாத் செயலாளர் ஜஹாங்கிர் மற்றும் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.

கல்வி விழிப்புணர்வு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் ஜமாத்துகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த தனது ஆலோசனைகளை பொதுச்செயலாளர் கூறினார்.

விரைவில் இது போன்ற விஷயங்களை விவாதிப்பதற்கு விரிவான ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக ஜமாத்தினர் கூறினர்.

மேலும் இச் சந்திப்பில் மஜக-வின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.