கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாக கூட்டம்..

மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மத் ஆரிப்
தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளருமான ஈரோடு பாபு ஷஹின்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் ஆகியோர் பங்கேற்று மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

கூட்டத்தில் புதிய கிளைகள் அமைப்பது, கொடியேற்று நிகழ்வுகள் நடத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. பாபு பிரசாத் IPS அவர்களை மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் ADS சர்தார், அய்யூப், சையத் ஜலால், மாநகர செயலாளர் முஹம்மத் உமர், ஓசூர் ஒன்றிய செயலாளர் பாஷா, மாநகர துணை செயலாளர் அப்சல், IKP மாவட்ட செயலாளர் யஹ்யா, மாவட்ட மருத்துவரணி செயலாளர் மஹபூப் பாஷா, தளி ஒன்றிய செயலாளர் நியாமத், வர்த்தகரணி துணை செயலாளர் அன்சர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.