காவல்துறை அதிகாரியிடம் மஜகவினர் கோரிக்கை மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் நெய்வாசல் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஹாஜா சலிம் தலைமையில் மயிலாடுதுறை காவல்நிலை ஆய்வாளர் P. செல்வம் அவர்களை சந்தித்து மஜக நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இச்சந்திப்பில் காவல்துறை அதிகாரியிடம் மயிலாடுதுறை சாலையில் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரியாசுதீன், நீடூர் நெய்வாசல் நகர செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர் பங்கேற்றனர்.