ஆம்பூர் நகர மன்ற தலைவரை சந்தித்து மஜகவினர் மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மன்ற தலைவர் P.ஏஜாஸ் அஹ்மத் அவர்களை மஜக மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா தலைமையில் மஜகவினர் சந்தித்தனர்.

இதில் ஆம்பூர் நகரத்தில் கடந்த பத்து வருட காலமாக சாலைகள் குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்பட்டு இப்போது சாலை போடும் பணி துவங்கியுள்ளது ஆனால் புதிய சாலைகள் அமைக்கும்போது பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைக்க வேண்டும். பழைய சாலைகளை தோண்டாமல் அப்படியே அதன் மீது புதிய சாலைகளை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அதை சரிசெய்யவும், தரமான சாலை அமைக்கவும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கும் நிலையில் உள்ள ஒரு சில பகுதிகளில் புதிய கால்வாய் அமைத்து சாலையையும் சீர் செய்து தர வேண்டும் என்றும்,

பொது மக்களின் நலன் கருதி ஆம்பூரின் பல்வேறு பகுதியில் சுற்றி திரியும், தெரு நாய்களை பிடித்து காப்புக் காட்டில் விடவும், தெரு நாய் பெருக்கம் அதிகரிக்காமல் இருக்க அவற்றை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆம்பூர் நகரமன்ற தலைவரிடம் அளிக்கப்பட்டது..

இந்த நிகழ்வில், மாவட்ட து.செயலாளர் முன்னா (எ) நஸீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வசீம், ஆம்பூர் நகர செயலாளர் ஜீஷான், மஜக நிர்வாகிகள் டீஷ் நாசிர், சுஹேல் ஆகியோர் பங்கேற்றனர்.