அபிராமாத்தில் சான்றோர் சந்திப்பு…

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வரும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அபிராமம் வருகை தந்தார்.

அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவிகளை நேரில் சந்தித்து பரிசளித்தார்.

பிறகு பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவருக்கு ஜமாத் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது ஜமாத்தினர் தங்களை ஊரின் பாரம்பரியம் மற்றும் வரலாற்று பின்னணிகள் குறித்து கூறினர்.

அங்குள்ள 200 ஆண்டு கால பள்ளிவாசலையும் பார்வையிட்டார்.

ஜமாத்தினர் செய்து வரும் சேவைகளுக்கு பாராட்டு கூறினார்.

இவ்வூர் மக்கள் ஒரு காலத்தில் பர்மாவில் செல்வாக்கு மிக்க வணிக சமூகமாக திகழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கு, KIBS போன்ற புகழ்பெற்ற கைலி தயாரிப்பு நிறுவனங்கள் இவ்வூராருடையது என்பதும் கூடுதல் செய்தியாகும்.

இச்சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி.சலாம், மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மீசல்.கனி, கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் முகவை நசீர், கீழை இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.