வக்ஃப் சட்ட திருத்தம்…

வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான நம் மாற்று கருத்தினை ஈ – மெயில் மூலம் தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும்.

To,

Joint Secretary,

Lok Sabha Secretariat,

Room No.440,

Parliament House Annexe,

New Delhi-110001.

Honourable Committee members,

Sub : Waqf Amendment Bill 2024,reg;

Indian constitution guarantees religious freedom for all citizens to profess, practice and propagate religion. So, to engage in religious affairs is solely vested in the followers of any religion.

I believe and understand that, the new bill proposing amendment in the waqf act is undermining the freedom of religion as specified in the article 25 of Indian constitution.

I vehemently oppose the waqf amendment bill 2024, as the contents in it, questions the religious freedom awarded by the constitution of India.

Yours sincerely,

YOUR NAME

வக்ஃப் சட்ட திருத்தம் தொடர்பான நம் மாற்று கருத்தினை ஈ – மெயில் மூலம் தெரிவிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு புதுச்சேரியில் 40 இடங்களில் வெற்றி தளபதி ஸ்டாலின் அவர்களின் வெற்றி மாலையில் 40 முத்துக்கள் ஜொலிக்கின்றன மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை….

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலின் முடிவுகள் வந்தவண்ணம் உள்ளது.

மோடியிஸத்திற்கும் – ஃபாஸிசத்திற்கும் மாற்றாக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற புரிதலோடு இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிய முடிகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றுள்ளது.

தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைக்கு கிடைத்த வெற்றியாக இதனை நாடு பார்க்கிறது.

துல்லியமான தகவல்கள், நிராகரிக்க முடியாத வாதங்கள், ஒயாத பயணங்கள் என அவர் திராவிடப் புயலாய் மாறி; சுழன்றடித்து ஆற்றிய உழைப்புக்கு; தமிழ்நாட்டு மக்கள் உரிய அங்கீகாரத்தை தந்துள்ளனர்.

முன்பு 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 இடங்களில் வென்றது.

அதே சாதனையை தளபதியார் அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளை கடந்து நிகழ்த்தியிருக்கிறார்.

ஆம். அவர் பெற்றிருக்கும் வெற்றிமாலையில் 40 முத்துக்கள் ஜொலிக்கின்றன.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் பெரிய பங்களிப்பை அவர் உறுதி செய்திருக்கிறார்.

அவர் தலைமையில் இந்தியா கூட்டணியோடு இணைந்து பணியாற்றியதில் மனிதநேய ஜனநாயக கட்சி பெருமிதம் கொள்கிறது.

இந்தியாவை பாதுகாக்கும் அறப்போரில் அவரது தலைமையில் தமிழர்கள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.

இத்தருணத்தில் திமுக தலைமையில் இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடந்த சித்தாந்த போராட்ட களத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சிகள், தோழமை அமைப்புகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் பெருமைமிகு ஜனநாயக மரபுகளை பாதுகாக்க தொடர்ந்து களமாட உறுதியேற்போம்.

முழுமையான வெற்றிச் செய்திக்கு காத்திருப்போம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04.06.2024.

ரத்ததான சேவை 90 நாட்களில் 150 யூனிட் ரத்ததானம் நாகை மாவட்ட மஜகவின் தொடரும் மனித நேயப் பணிகள்…

ஜூன்,03

தமிழ்நாடு முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணி சார்பில் உயிர் காக்கும் ரத்ததான சேவைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் மட்டும் கடந்த 90 நாட்களில் 150 யூனிட்டுகள் ரத்தம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவிர, நேரடி உதவி கோரல்கள் என உதவி கேட்டவர்கள் அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாகை மாவட்ட மருத்துவ சேவை அணி துணை செயலாளர் N. உமர் முக்தார் அவர்கள் தலைமையில் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் ரத்ததான சேவையில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் மஜகவின் சேவைகளுக்கு தலைவர் மு.தமிமுன் அன்சாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
03.06.2024.

சென்னையில் CPM பேரணி பாலஸ்தீனர்களுக்கு எதிரான படுகொலையை நிறுத்துக மஜக வினர் பங்கேற்று ஆதரவு…

ஜூன்.02.,

ஆக்கிரமிப்பு இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக உலகமெங்கும் போராட்டங்களும் கண்டன பேரணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்சி என்ற ஒரு பொறுப்புணர்வோடு இப் பிரச்சனையில் களமிறங்கி உள்ளது.

சென்னையில் இன்று மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) சார்பில் கண்டன பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிப்பதாக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அறிக்கை விடுத்திருந்தார்.

சி.பி.ஐ மைய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா அவர்களது தலைமையில் இன்று நடைபெற்ற பேரணி சென்னையில் உள்ள புதுப்பேட்டை பாலம் அருகிலிருந்து தொடங்கப்பட்டது.

கண்டன முழக்கங்கள், பாடல்கள், கவிதைகள், பறை இசை நிகழ்வுகள் என நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.

நிறைவாக மஜக மாநிலச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், கலைக்குயில் இப்ராகிம், மாநிலத்துணைச் செயலாளர்கள் அரிமா. அஸாருதீன், பேரா.சலாம் உள்ளிட்டோர் CPM மாநிலச் செயலாளர் தோழர். பாலகிருஷ்ணனை சந்தித்து, CPM எடுத்த இம்முயற்சிக்கு தங்களது புரட்சிகர பாராட்டுகளை கூறினர்.

அவரும் மஜக-வின் ஆதரவுக்கு நன்றி கூறினார்.

இதில் மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், மாவட்ட துணைச்செயலாளர் தாஜுதீன், வடசென்னை மாவட்ட பொருளாளர் ரசாக், மாவட்ட துணைச்செயலாளர் அல்லா பகஷ், தென்சென்னை மாவட்ட பொருளாளர் நாகூரான் மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மாவட்டம்
02.06.2024.

திரு.வி.கா நகரில் பொதுமக்களுக்கு குளிர்பானம் மோர் வழங்கிய மஜகவினர் மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…..

ஜூன்.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,
வடசென்னை மேற்கு மாவட்ட மஜக சார்பில் திரு.வி.க நகர் பகுதியில் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் – மோர் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஹனீஃப் அவர்களது தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இதில் மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை. முபாரக் ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்ளுக்கு குளிர்பானங்களை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்க குளிர்பானங்கள் வழங்கிய மஜக-வினரை பொதுமக்கள் நன்றியுடன் பாராட்டினர்.

இதில் மாநில துணைச்செயலாளர் அரிமா.அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக், மாவட்ட துணைச்செயலாளர் அல்லா பகஷ் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
02.06.2024