திருப்பூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் பங்கேற்பு…

திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இக்பால் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது பாரூக், மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான கோவை ஜாபர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது.

அதன் பின்னர் பொதுச் செயலாளர் அவர்கள் கட்சியின் வளர்ச்சி, அடுத்தகட்ட நகர்வு, கிளைகள் கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

புதிதாக பலர் வெவ்வேறு கட்சிகள், அமைப்புகளிலிருந்து விலகி நமது கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது குறித்தும், செயல்படாமல் ஒதுங்கியிருக்கும் பழைய நிர்வாகிகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

நிறைவாக எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய சேலம் மத்திய சிறை முன்பு நடைபெற உள்ள சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பது குறித்தும், அது சார்ந்த களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்திலிருந்து 25-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புறப்படுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் நிர்வாகிகள், செயல் வீரர்கள் என பலரும் பொதுச் செயலாளரை சந்தித்து கட்சி பணிகள் குறித்து தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

இன்றைய கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, சாதிக், யாசர், ஈஸ்வரன், ஷேக் ஒலி, அணி நிர்வாகிகள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முகமது ஆரிப், mjvs அப்பாஸ், சாகுல், மாணவர் இந்தியா அசாருதீன், முகமது ஆசிக், மற்றும் மனிதஉரிமை அணி இம்ரான், it wing காதர் கான், MJTS காஜா உசேன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாநகர்_மாவட்டம்
05.09.2023