கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்

இன்று கோவை மாவட்ட மஜக-வின் சார்பில செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H. அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது ஃபாரூக், மாநில செயலாளர் கோவை ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் செப்டம்பர் 27 அன்று ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி, சேலம் மத்திய சிறைக்கு முன்பு நடைபெற உள்ள போராட்ட களம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் கோவை மாநகர் மாவட்டத்திலிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமானோரை திரட்டி சென்று சேலம் களத்தில் பங்கேற்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தின் சார்பில் திட்டமிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாநிலச் செயலாளர் கோவை ஜாபர் பேசும்போது, கடந்த 6 மாத கால மாவட்ட மஜக பணிகள் குறித்து பாராட்டினார். மேலும் கோவையில் சகல தரப்போடு நட்புறவையே நாம் விரும்புகிறோம் என்றார்.

மாவட்ட செயலாளர் அப்பாஸ் பேசும் போது, இன்றைய நிகழ்ச்சிகளுக்காக அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஆற்றிய உழைப்பை பாராட்டினார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்யது முகம்மது பாரூக் பேசும்போது, சேலம் போராட்ட களத்தை மேற்கு மண்டலத்தில் எழுச்சியோடு நடத்திட கோவை மாவட்ட மக்களின் பங்கேற்பு குறித்து பேசினார்.

பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசும்போது, வன்முறைக்கு பணியவும் மாட்டோம், அதற்கு துணியவும் மாட்டோம் என்ற மஜக நிலைபாட்டை விளக்கினார்.

ஆதரவாளர்களை தூண்டிவிட்டுவிட்டு ஓடி விடுவது, வன்முறைக்கு தூபம் போடுவது போன்ற கலாச்சாரங்களுக்கு நாம் ஒரு காலத்திலும் ஆதரவளித்து விடக்கூடாது என்றும், ஜனநாயக வழியில் மக்கள் பணியாற்றும் அதே பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

இன்றைய நிகழ்வுகளை ஒருங்கிணைத்த மாவட்ட / பகுதி / கிளை நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தவர், MJTS நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

கள ஒருங்கிணைப்பை சிறப்பாக முன்னெடுத்த இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஃபைசல் அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறினார்.

நிறைவாக கோவையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வரும் மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் அனைத்து காவல்துறை – உளவுத்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய அரசின் சமூக நீதிக்கு எதிரான விஸ்வகர்மா திட்டத்தை துணிச்சலுடன் எதிர்த்து கருத்துரைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட துணைச்செயலாளர் ஹனீப் அவர்களின் நன்றியுரை மற்றும் கட்சி முழக்கங்களுடன் செயற்குழு கூட்டம் நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜாபர் சாதிக், அன்வர், காஜா, இளைஞரணி செயலாளர் முஜீப், வர்த்தகர் அணி செயலாளர் பயாஸ், MJTS மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, MVP மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஹாரூன் ரசீது, சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஹக்கீம், IT WING செயலாளர் சிராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரோஸ் கான் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.09.2023